[X] Close >

கொரோனா மருந்தை மனிதர்களுக்கு பரிசோதிக்கும் சீனா : சாதனையா ? வியாபாரமா ?

China-tightens-Russian-border-checks--approves-experimental-coronavirus-vaccine-trials

கொரோனா வைரஸுக்கான இரண்டு மருந்துகளை மனிதர்கள் மீது சீனா பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

உலகிலேயே முதன்முதலில் கொரோனா வைரஸ் அறியப்பட்டது சீனாவில் தான். சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் சீனா முழுவதும் பரவியது. தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்த வைரஸை சீனா தான் உருவாக்கியது என்றும், உலக அளவில் வல்லரசு நாடாக சீனா வளர வேண்டும் என்பதற்காக இதை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அத்துடன் வுகான் மாகாணத்தில் தான் சீனாவின் உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகம் இருப்பதால், அங்கிருந்து தான் இந்த வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டு பகிரப்பட்டது எனவும் தகவல்கள் பரவின. ஆனால் இவற்றுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.

image


Advertisement

இருந்தாலும் சீனாவில் ஜெட் வேகத்தில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சட்டென பிரேக் போட்டிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது. பல நாடுகளும் சீனா கொரோனாவை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தது என கேள்விகளை எழுப்பின. அதற்கு தங்களிடம் இருக்கும் கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கொண்டு வந்ததாகக் கூறிய சீனா, அவற்றை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தன. ஆனால் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சீனாவின் கொரோனா பரிசோதனை கருவிகளை விமர்சித்தன. தரமற்ற கருவிகள் என்றே அனைத்து நாடுகளும் குற்றம்சாட்டின. இதற்கிடையே சீனாவிலிருந்து கருவிகளை இறக்குமதி செய்ய இந்தியா ஆர்டர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

image

இதனால் சீனாவின் கொரோனா கருவிகள் வியாபாரம் உலக சந்தையில் பெரிதும் எடுபடவில்லை. இது ஒருபுறம் இருக்க சீனாவில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டன. வுகான் மாகாணத்திலேயே ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டன. இது உலக நாடுகளை மேலும் ஆச்சர்த்தியத்தில் தள்ளியது. பல்வேறு நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்து வருகின்றனர். உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் கையில் சிக்கி படாதபாடு படுகிறது. அங்கே மக்களின் உடல்களை அள்ளிச்சென்று பெரிய பள்ளங்களை தோண்டி புதைக்கின்றனர். இப்படி இருக்கையில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனாவில் 3,341க்கும் மேல் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது எப்படி ? என பல நாடுகளும் சந்தேகிக்க தொடங்கியுள்ளன.


Advertisement

image

அமெரிக்கா மறைமுகமாக சீனா மீது குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தியது தொடர்பாக சார்க் மாநாட்டில் விளக்கமளித்திருந்த சீனா, தங்களது கருவிகள், மருத்துவர்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனாவை வீழ்த்தியதாக தெரிவித்திருந்தது. இவ்வாறாக பல்வேறு சர்ச்சைகள் சீனாவை சுற்றி தொடர்ந்துகொண்டே இருக்க, தற்போது கொரோனாவிற்கு மருந்தை கண்டுபிடித்து, ஆரம்பகட்டமாக அதை மனிதர்களுக்கு சீனா பரிசோதிக்க தொடங்கியுள்ளது.

எங்கியிருந்து கொரோனா வைரஸ் பரவியதோ, அதே வுகானில் உள்ள உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தான் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மருந்து பெய்ஜிங்கை சேர்ந்த நாஸ்டாக் லிஸ்டெட் சினோவோக் பயோடெக் என்ற குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image

இதற்கிடையே ரஷ்யாவில் இருந்து சீனாவிற்கு வரும் எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவில் உள்ள சீனர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதால், அவர்களை ரஷ்யா திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு ரஷ்யாவிலிருந்து ஹைலான்ஜியங் எல்லை வழியாக சீனா வந்த 79 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த எல்லை சீன அரசு மூடியுள்ளது. அத்துடன் சீனாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவி வருபவர்களுக்கு 3000 யுவான் அபராதம் விதிக்கப்படும் எனவும், ஊருவலை அரசுக்கு தெரியப்படுத்துபவர்களுக்கு 5000 யுவான் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘காரில் சைரன்.. அரசு அதிகாரி ஸ்டிக்கர்’ ஊர் சுற்ற ஐஏஎஸ் போல் நடித்த இளைஞர்..!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close