தமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

The-number-of-coronavirus-in-Tamil-Nadu-has-increased-to-2-

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

image 

கொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்? ஆய்வுகள் சொல்வது என்ன..?


Advertisement


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த சிங்காரத்தோப்பை சேர்ந்த 51 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். டெல்லி மாநாட்டில் பங்கேற்ற இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனாவிற்கு மதுரையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியான நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆக உயர்ந்துள்ளது. இவர்களும் இருவருமே முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement