[X] Close >

சீனியர் நடிகைகளுடன் சிங்க் ஆகும் விஜய் சேதுபதி!

vijya-sethupathi-act-with-nayanthara--thrisha

வயது அதிகரிக்க அதிகரிக்க நடிகைகளுக்கு படவாய்ப்புகள் குறைவதுதான் வழக்கம். இப்போதெல்லாம் அது வழக்கொழிந்து வருகிறது. வயதான நடிகைகளுக்குத் தான் படவாய்ப்புகள் வாலண்டரியாய் வந்து குவிகின்றன. அந்த லிஸ்டில் முதலிடம் நயன்தாராவுக்கும் த்ரிஷாவுக்குத்தான்! 
விஜய்சேதுபதி நயன்தாராவுடன்  இணைந்து நடித்த நானும் ரவுடி தான் சூப்பர் ஹிட்!
அடுத்து தற்போது வெளியாக உள்ள இமைக்கா நொடிகளில் சில நிமிடங்களே வந்து போனாலும் நயன்தாராவின் கணவராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. நயன் தாராவைத் தொடர்ந்து சீனியர் நடிகை த்ரிஷாவுடன் கைகோர்க்கிறார் அவர். அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் த்ரிஷா, விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டது. வேறு படங்களில் த்ரிஷாவும், விஜய் சேதுபதியும் பிஸியாகி விட, ஒருவழியாக இம்மாதம் 12ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பை தொடர்ங்கி இருக்கிறார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரேம் குமார் இப்படத்தை இயக்க இருக்கிறார். 
"காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தை ஆரம்பித்து சில நாட்கள் ஷூட்டிங்கும் நடைபெற்றது. நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கி வந்த இந்தப்படம் பாதியில் நின்று விட்டது. இந்தப்படம் மட்டும் வந்திருந்தால் ஒரே படத்தில் இரு சீனியர் நடிகைகளுடன் நடித்தவர் எனப்பேசப்பட்டிருப்பார் விஜய் சேதுபதி! காத்துவாக்குல படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகள் யார் தெரியுமா..? இதே த்ரிஷாவும் நயன்தாராவும் தான்!


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close