தவறான உறவை தட்டிக்கேட்ட நபர்‌ படுகொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தவறான உறவை தட்டிக்‌கேட்ட நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அழகுராஜன். இவருக்கு மனைவியும், அகிலேஷ், அஜய் என்ற 2 மகன்களும் உள்னர். அழகுராஜன் அதேபகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். வழக்கமாக பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு அருகில் இருக்கும் கழுகுமலைக்கு செல்வது வழக்கம்.

image


Advertisement

அதேபோல் நேற்றும் பொருட்கள் வாங்க கழுகுமலைக்கு சென்றுள்ளார் அழகுராஜன். அங்கிருந்து வீடு திரும்பும்போது அவரை ஒருவர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இதனையறிந்த அழகுராஜனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதா கிரேன்? - ‘இந்தியன்2’ விபத்திற்கு யார் காரணம்? 

image


Advertisement

இதைத்தொடர்ந்து கொலை செய்த இளைஞர் மகேந்திரன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அப்போது, மகேந்திரன் திருமணம் ஆன பெண் ஒருவருடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும் அதனை தட்டிக்கேட்டதால் அழகுராஜனை கொலை செய்ததாவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

image

சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர்கள் - வரலாற்றில் பாடம் கற்ற அமெரிக்கா 

இதனிடையே அந்த வழியாக வாகனத்தில் சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வழிமறித்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement