தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது? அதற்கான திட்டம் என்ன? என்பது குறித்து பொருளாதார நிபுணர் சேதுராமன் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவையில் 2020-2021 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையின் மூலம் தமிழகத்தின் மொத்த வருவாய் 2,19,375 கோடி ரூபாய் கிடைக்க இருப்பதாகவும் அதில் செலவு தொகை மட்டும் 2,41,601 கோடி ரூபாயாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆக, இந்தப் பட்ஜெட் தொகையின்படி 22,225 கோடி ரூபாய்க்குப் பற்றாக்குறை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், டாஸ்மாக் மூலம் மட்டுமே ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் செய்வோருக்கான மானியத்தை அதிகரித்துள்ளனர். தமிழகம் என்பது விவசாயத்தை ஆதாரமாக கொண்டுள்ள மாநிலம்.
ஆகவேதான் வேளாண்துறைக்கு கடந்த முறை 10,550.85 கோடி நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு 11,894.48 கோடி ரூபாய் ஒதுக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 1,229.37 கோடி ரூபாய் தொகை அதிகரிக்கப்பட உள்ளது. ஆக, இவை எல்லாம் கணக்குகள்தான். இதன் பிறகு பட்ஜெட்டில் சொல்லப்பட்ட அளவுக்கு அரசு நிதியை ஒதுக்க வேண்டும். அப்போதுதான் இவ்வளவு திட்டமிடலையும் அரசு நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டில் அறிவித்து விட்டு நிதியை ஒதுக்கத் தவறினால் மொத்த திட்டமும் முடங்கிப் போகும் ஆபத்தும் உள்ளன.
அரசிற்கு 22,225 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை வருவதாக இருக்கும் பட்சத்தில் நமது நிதியை எப்படி பெருக்குவது? செலவினங்கள் அதிகரிக்க என்ன காரணம்? என்று பொருளாதார நிபுணர் சேது ராமனிடம் கேட்டோம். அதற்கு அவர் சில யோசனைகளைக் குறிப்பிட்டார். நிதியை எப்படி மாநிலத்திற்குள்ளாகவே தக்கவைப்பது எனப் பல கருத்துகளை அவர் முன்வைத்தார். அவர் குறிப்பிடும்போது, “மானியங்கள் அதிகரிக்க, அதிகரிக்கப் பற்றாக்குறை என்பது அதிகரிக்கத்தான் செய்யும். அப்படி அதிகரிக்கும் போது அதை எப்படி ஈடுகட்ட முடியும் என்பது கேள்வி. இதற்கான விளக்கங்கள் அரசு வழங்கினால் மேலும் நன்றாக இருக்கும். கடந்த ஆண்டை விட விவசாயத்திற்கு நிதியை அதிகரித்திருக்கிறார்கள். 60 சதவீதத்திற்காக உற்பத்தித் திறன் நம்மிடமே இருப்பதால் வருமானம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
வேறு மாவட்டத்திலிருந்து சென்னை, திருச்சி, கோயமுத்தூர் போன்ற நகரங்களுக்கு வேலை செய்ய வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஏதாவது செய்ய வேண்டும். அவர்கள் இடம்பெயராமல் அவர்கள் பகுதியிலேயே வேலை செய்யும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அதேபோல் வெளிமாநிலத்திலிருந்து வந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதைத் தடுப்பதற்கான திட்டங்களை உண்டாக்க வேண்டும். இங்கேயே இருப்பவர்கள் பணியை மேற்கொள்ளும்படி யுக்திகளை புதியதாக மாற்றியமைத்தால் நம் மாநிலத்தின் வருவாய் இங்கேயே புழங்கும் சூழல் உருவாகும். ஏறக்குறைய மாதத்திற்கு 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தைவிட்டு வருமானம் வெளியே செல்கிறது. சம்பளப் பணமாக மட்டுமே போகும் தொகை இது. இந்தத் தொகையை நாம் தக்க வைத்தால் நமது மாநில வருவாய் இன்னும் வளர்ச்சி அடையும்” என்றார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு