மீண்டும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய்..!

Vijay-Arrived-To-Master-Shooting-Spot

நடிகர் விஜய் மீண்டும் தனது மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.


Advertisement

‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையை தொடங்கியது. அதேபோல், படம் தயாரிக்க கடன் கொடுத்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

image


Advertisement

இதைத்தொடர்ந்து நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கினர் வருமான வரித்துறையினர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது.

“தரையில் அமர்ந்து படித்து அமைச்சரானோம்” - மாணவர்கள் மத்தியில் செல்லூர் ராஜூ பேச்சு

விஜய் வீட்டில் 23 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு நிறைவு பெற்றது. அங்கிருந்து பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா, ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்பது குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.


Advertisement

image

இந்நிலையில், சோதனை நிறைவு பெற்றதையடுத்து நடிகர் விஜய் மீண்டும் தனது மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

ஸ்டுவர்ட் பின்னியை வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்.. பதிலடி கொடுத்த மயாந்தி லாங்கர்..!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement