தமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள் - விண்ணப்பிக்கத் தயாரா?

Assistant-Junior-Assistant-in-Apex-Cooperative-Institutions---Vacancies-Out---Are-you-Ready-to-apply-

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Advertisement

பணிகள்:
1. உதவியாளர்
2. இளநிலை உதவியாளர்


Advertisement

இதையும் படிக்க: நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணி! - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

காலிப்பணியிடங்கள்:
1. உதவியாளர் - 291
2. இளநிலை உதவியாளர் - 09

image


Advertisement

மொத்தம் = 300 காலியிடங்கள்

இதையும் படிக்க: பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி: விண்ணப்பிக்க தயாரா?

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 11.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.02.2020, மாலை 05.45 மணி வரை
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 01.03.2020, காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

வயது: (01.01.2019 அன்றுக்குள்)
1. குறைந்தபட்சம், 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
2. ஓ.சி வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு - 30 வயது
3. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி வகுப்பினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் போன்றோருக்கு வயது வரம்பு இல்லை.

இதையும் படிக்க: குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு (Any Degree) (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருத்தல் வேண்டும்.

குறிப்பு:
1. பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பிற்கு பதிலாக, 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம்.

2. விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு / மேல்நிலை படிப்பு / பட்டப்படிப்பின் போது தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

3. கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

இதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..!

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.9,300 முதல் அதிகபட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.250
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

குறிப்பு:
ஏற்கெனவே 23.10.2019 முதல் 22.11.2019 வரையிலான தேதிகளில் விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் மீண்டும் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

இதையும் படிக்க: எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா?

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.tncoopsrb.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

விண்ணப்பிக்க தேவையானவை:

image

இதையும் படிக்க: முப்படை பிரிவுகளில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?

தேர்வு செய்யப்படும் முறை:
1. எழுத்துத் தேர்வு
2. நேர்முகத் தேர்வு

மேலும், இதுகுறித்த முழுத் தகவல்களை பெற, https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: அமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement