சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த நபரை ஆந்திரா மாநிலத்திற்கு வரவழைத்து கணவருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (43). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த மாதேஸ்வரி (30) தனது தம்பியை பார்பதற்காக அடிக்கடி அனகாபுத்தூர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பக்கத்து வீட்டில் இருக்கும் கார்த்திகேயனுக்கும் மாதேஸ்வரிக்கும் 2 வருடமாக திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது
இதுகுறித்து மாதேஸ்வரியின் சகோதரருக்கு தெரிய வந்துள்ளது. மாதேஸ்வரியை ஆந்திராவுக்கு அனுப்பிவைத்த அவரது சகோதரர், இது குறித்து ஆந்திராவில் உள்ள மாதேஸ்வரியின் கணவர் சிவகுமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மனைவி மாதேஸ்வரியிடம் சிவக்குமார் இதுபற்றி விசாரிக்க, கார்த்திகேயன் தான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கார்த்திகேயனை ஆந்திரா வரவழைத்த மாதேஸ்வரி தன் கணவருடன் சேர்ந்து அவரை கட்டையால் அடித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் கார்த்திகேயனின் உடலை வீட்டின் அருகே புதைத்துள்ளனர்.
மகனை காணவில்லை என கார்த்திகேயனின் தாய் அளிந்திருந்த புகாரின் அடிப்படையில் போலீசார் செய்த விசாரணையில் மாதேஸ்வரி சிக்கியுள்ளார். கார்த்திகேயனின் செல்பொன் சிக்னல், கடைசியாக ஆந்திராவில் இருந்ததை வைத்து போலீசார் துப்புதுலக்கியுள்ளனர். பின்னர் மாதேஸ்வரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செங்கோடு அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்