பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா படத்தில் மம்மூட்டி அம்பேத்கர் வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கபாலி படத்துக்குப் பின்னர் இயக்குனர் பா.இரஞ்சித்துடன் இரண்டாவது முறையாக ரஜினி கைகோர்த்துள்ள படம் காலா கரிகாலன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. படத்தில் அம்பேத்கர் வேடத்தில் மம்மூட்டி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தற்போது இணையத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது.
காலா பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி அமர்ந்திருக்கும் வாகனத்தின் பதிவு எண் MH 01 BR 1956. அம்பேத்கர் இறந்த வருடத்தைக் குறிப்பிடும் வகையிலேயே 1956 என்ற எண் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், படத்தில் அம்பேத்கர் வாழ்ந்த காலம் குறித்த பதிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அம்பேத்கர் வேடத்தில் ஏற்கனவே நடித்திருந்த மம்மூட்டியை, காலாவிலும் அம்பேத்கர் வேடத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் காலா படத்தில் ஹீரோயினாக இந்தி நடிகை ஹூமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் நடிப்பது குறித்து முதன்முறையாக ட்விட்டரில் ஹூமா குரேஷி சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் காலா படத்தின் ஸ்க்ரிப்ட் பேப்பர்கள் சிலவற்றின் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார். அதில், காலா பீம்ஜியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டார். காலாவின் வருகைக்காக ஜரீனா காத்திருக்கிறார் என்று காட்சிகள் விளக்கப்பட்டிருந்தன.
அதுமுதல் ரஜினியுடன் வரும் பீம்ஜி கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த இரு விஷயங்களையும் முடிச்சுப்போட்டு பீம்ஜி கதாபாத்திரத்தில் நடிகர் மம்மூட்டியே நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், படக்குழு இந்த தகவலை மறுக்கவோ அல்லது உறுதி செய்யவோ இல்லை. மம்மூட்டி-ரஜினி ஆகிய இருவரும் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டில் வெளியான தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?