செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்றுதிரண்டு போராடுவதாகக் கூறி சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி குடியிருப்புகளை அடிப்படையாக கொண்டது என்றும், ஆனால் பாஜக அரசு கொண்டு வந்திருப்பது மத ரீதியாக பிளவு உண்டாக்க எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆதரித்து அதிமுக வரலாற்று கேட்டை செய்துவிட்டு, இன்றைக்கு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் முதலமைச்சர் நாடகமாடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன என்று முதலமைச்சர் கூறுவதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், ஈழத்தமிழர்களையும், போராடும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளையும் சிறுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?