சரத் பவாரை சந்தித்தார் சஞ்சய் ராவத் - சூடுபிடிக்கும் மகாராஷ்டிரா அரசியல் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிவசேனா கட்சியின் செய்திதொடர்பாளர் சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். 


Advertisement

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது.

சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.


Advertisement

இதனிடையே மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனாதான் வெற்றி பெறும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். ஆனால், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் “விரைவில் ஆட்சி அமைப்போம். புதிய அரசை அமைப்பதில் முற்றிலும் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சிவசேனா கட்சியின் எம்பியும் செய்திதொடர்பாளருமான சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. 


Advertisement

மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்து விலகினால், சிவசேனா உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தயார் என்றும் 5 ஆண்டுகளுக்கு சிவசேனா கட்சியினரே முதல்வர் பதவியில் இருக்கலாம் என்று தேசியவாத காங்கிரஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement