JUST IN

Advertisement

அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின், விசாரணை தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. இதில் கடந்த 16-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆஜராகி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் விருந்தினர் மாளிகை முன்பு சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளிதார்.


Advertisement

அப்போது பேசிய அவர், ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்துடன் அமைச்சர்களை ஒப்பிட்டு விமர்ச்சித்தார். இது குறித்து அதிமுக பிரமுகரான தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் கலைஞர் நகரை சேர்ந்த சுயம்பு (வயது 58) என்பவர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். 

அதில் சீமான், அமைச்சர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து உள்ளார். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 153(ஏ), 505(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement