எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை: சஞ்சய் தத் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.


Advertisement

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ராஷ்டிரிய சமாஜ் பக்‌ஷா கட்சியில் அடுத்த மாதம் 25ஆம் தேதி சஞ்சய் தத் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் மாநில அமைச்சருமான மகாதேவ் ஜன்கர் நேற்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்று சஞ்சய் தத் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய போது, “நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை. ஜன்கர் என்னுடைய சிறந்த நண்பர். என்னுடைய சகோதரர் போன்றவர். அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.


Advertisement

         

முன்னதாக, கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சஞ்சய் தத், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். மும்பை வெடிகுண்டு சம்பவத்தில் சஞ்சய் தத் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement