பழிவாங்கும் செயல்: பாஜகவுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

Thirunavukarasar-condemns-BJP

ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ நடத்திய சோதனைக்கு மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் சிதம்பரத்தை அச்சுறுத்துவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இந்த முயற்சி, அரசியல் பழிவாங்கும் செயல் என்பதால் இதனை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார். பாரதிய ஜனதாவின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள காங்கிரஸ் என்றும் தயாராகவே இருப்பதாகவும், இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை அடக்கிவிடலாம் என நினைக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது என்றும் திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் தெரி்வித்திருக்கிறார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement