நட்சத்திர ஒட்டலில் நூறு நாட்கள் தங்கிவிட்டு, வாடகை கொடுக்காமல் தப்பிய தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கிறது தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டல். இந்த ஓட்டலின் சொகுசு அறையில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் தங்கியிருந்தார். 102 நாட்கள் தங்கி இருந்த இவருக்கு அறை வாடகையாக ரூ.26 லட்சம் பில் வந்தது. கடந்த ஏப்ரல் மாதம், 13.62 லட்சத்தை கொடுத்துவிட்டு பாக்கியை பின்னர் தருவதாகச் சொன்னார். அவரை நம்பியது ஓட்டல் நிர்வாகம்.
இந்நிலையில் ஒரு நாள், யாரிடமும் சொல்லாமல் சத்தமின்றி அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் அவரது தொலைபேசிக் கு ஓட்டல் நிர்வாகம் தொடர்பு கொண்டது. ஆனால், அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பலமுறை தொடர்பு கொண்டும் பலனில்லாததால், பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் ஓட்டல் நிர்வாகம் புகார் செய்தது. போலீசார் அந்த தொழிலதிபரை தேடி வருகின்றனர்.
Loading More post
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்