யாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை யாரும் ஏலத்திற்கு எடுக்க முன்வராத நிலையில் இன்னும் அது சென்னை விமான நிலையத்திலேயே உள்ளது.


Advertisement

மறைந்த தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு பரப்புரை உள்ளிட்ட பயணங்களுக்காக பெல் 412 EP வகை ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கினார். மொத்தம் 11 பேர் பயணம் செய்யும் வகையில் இந்த ஹெலிகாப்டர் உள்ளது. வாங்கியதில் இருந்து மிகக் குறைந்த முறையே பயன்படுத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர் அதன்பின் நீண்ட நாட்களாகவே பயன்படுத்தப்படாமல் உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக பயன்படுத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டரை ஏலத்திற்கு விட முடிவெடுக்கப்பட்டு அதற்கான பொறுப்பு மாநில வணிக கழகக்திற்கு ஒப்படைக்கப்பட்டது. ஹெலிகாப்டரும் சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.


Advertisement

காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் !   

அதன்படி ஹெலிகாப்படர் ஏலத்திற்கான அடிப்படை விலை ரூ.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. ஆனால் அதனை ஏலத்திற்கு எடுக்க யாரும் முன்வரவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின்போதாவது யாரும் ஹெலிகாப்டரை ஏலத்தில் எடுக்க முன்வருவார்கள் என அதிகாரிகள் நினைத்திருந்தனர். ஆனால் யாரும் அப்போதும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனிடையே ஒருவேளை அடிப்படை விலையை குறைத்தால் ஹெலிகாப்டர் ஏலம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். யாரும் ஏலத்திற்கு வாங்க முன்வராத காரணத்தில் தற்போது வரை அந்த ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்திலேயே உள்ளது.


Advertisement

Source: TheHindu

loading...

Advertisement

Advertisement

Advertisement