பக்கவிளைவுகள் இல்லாத ‘ஃபாரஸ்ட் பாத்திங்’ மருத்துவம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தினசரி பரபரப்புகளிலிருந்து ஓய்வு பெற்று இயற்கை சூழலை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு 'பாரஸ்ட் பாத்திங்' என்ற மருத்துவ முறை தற்போது அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது.


Advertisement

இயற்கை வளம் கொட்டிக்கிடக்கும் வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் அழகான சூழலை ரசிப்பதற்கு மட்டுமல்லாது, மனதையும்,உடலையும் ஆரோக்கியமாகவும்,புத்துணர்வுடனும் வைத்துக்கொள்ள,கடந்த 1980 ஆம் ஆண்டு ஜப்பானில் “பாரஸ்ட் பாத்திங்” (Forest bathing) என்ற மருத்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைக் கேட்டவுடன் பாரஸ்ட்டில் குளியலா‌ என்ற சந்தேகம் எழும். ஆனால் அப்படியில்லை. ‘இயற்கையோடு ஒன்றிவாழ்’ என்பதே இதன் பொருள்.

Image result for Forest bathing


Advertisement

இயற்கையை கண்டு ரசித்து, சுத்தமான காற்றை சுவாசித்து, பறவைகளின் கூக்குரல்களைக் கேட்டு வாழ்வதே “பாரஸ்ட் பாத்திங்”. இது எல்லா நோய்களுக்கும், பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமுறை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். Dog wood என்ற மரங்களுக்கு அடியில் சிறிதுநேரம் நின்றாலோ,குளிர்ச்சியான புல்லின் மீது வெறுங்காலுடன் நின்றாலோ ஒருவகையான புத்துணர்வு ஏற்படும் என வாஷிங்டன் டி.சியில் உள்ள தேசிய தோட்டக்கலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான கிளேர் கெல்லி தெரிவிக்கிறார். 

Image result for Forest bathing

எவ்வளவுதான் மன அழுத்தம் இருந்தாலும் “பாரஸ்ட் பாத்திங்” அதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். மரங்களுக்கு கீழ் நிற்கும்போது ஒருவித வைப்ரேஷன் நமது உடலில் ஏற்படும்‌ என்றும், இரண்டு நாட்கள் இரவு காட்டில் மரங்களோடு வாழ்ந்தால் உடலில் நோய்‌ எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் அமெரிக்க தேசிய சுகாதார நல ஆலோசகர் டாக்டர் பால் ஜரிஸ் கூறுகிறார். மரங்களிலிருந்து வெளியாகும் phytoncides என்று அழைக்கப்படும் ஆன்டி மைக்ரோபயல் இரசாயனங்களே மனிதர்களுக்கு புத்துணர்வை அளிப்பதாக கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement