காவல்துறையின் புலன் விசாரணை தரம் தாழ்ந்து விட்டது : நீதிபதி வேதனை

The-Madras-HC-says-the-police-s-investigative-quality-is-downgraded

குற்ற வழக்குகளில் காவல்துறையினரின் புலன் விசாரணை தரம் தாழ்ந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.


Advertisement

குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 264 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் குற்ற வழக்குகளில் காவல்துறையினரின் புலன் விசாரணை தரம் தாழ்ந்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். உண்மை குற்றவாளிகளை அடையாளம் காண அடையாள அணிவகுப்பு நடத்தாத காரணத்தால், எந்த ஆதாரமும் இல்லாமல், புகாரின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றங்கள் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Image result for high court chennai


Advertisement

இதனையடுத்து காவல் துறையினரின் புலன் விசாரணை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான வழிகளை காண வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எண்ணிக்கைக்காக காவல் துறையினர் வழக்குகளை பதிவு செய்கின்றனரோ என்ற அச்சத்தை வலுப்படுத்துவதாக உள்ளது என்றார். மேலும் தமிழகம் முழுவதும் 2018 டிசம்பர் வரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன? நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகள் எத்தனை? அவற்றின் முடிவுகள் என்ன? என்பன குறித்த விவரங்களை மாவட்ட வாரியாக நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement