ஃபிபா அணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 48 ஆகிறது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஃபிபா என்றழைக்கப்படும் சர்வதேச உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் 32-லிருந்து 48 ஆக அதிகரிக்கப்படும் என ஃபிபா கவுன்சில் அறிவித்துள்ளது.


Advertisement

உலக கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது 32 நாடுகள் மட்டுமே பங்கேற்கின்றன. இதனை 48-ஆக மாற்றும் திட்டத்துக்கு ஃபிபா கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே 2026-ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 48 நாடுகள் அணிகள் பங்கேற்கும். ஃபிபாவின் இந்த முடிவால், 2026-ல் உலககோப்பை கால்பந்து போட்டியில் ஆசிய மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement