“குறுக்குவழியில் சித்தியை வைத்து கொள்ளையடித்தவர் தினகரன்” - திண்டுக்கல் சீனிவாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சகிகலாவின் அக்கா மகன் என்ற தகுதியை தவிர தினகரனுக்கு வேறு எந்தத் தகுதியும் இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.


Advertisement

பழனியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தங்களுக்கு திறமை இருப்பதால் ஒரே குதிரையில் இருவர் பயணிப்பதாகவும், தினகரன் அதிமுக கட்சிக்காக எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும், தினகரனுக்கு சகிகலாவின் அக்கா மகன் என்ற தகுதியை தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லை என விமர்சித்து பேசினார். 

32 ஆண்டு காலமாக ஜெயலலிதாவுடன் இருந்து எந்தெந்த வழியில் எல்லாம் கொள்ளையடிக்க முடியுமே அந்தவழியில் எல்லாம் கொள்ளை அடித்த கூட்டம் தினகரன் குடும்பம் என்றும், குறுக்குவழியில் சித்தியை வைத்து கொள்ளையடித்த தினகரன் தன்னை ஒரு பெரிய தலைவனை போல காட்டிக்கொண்டார் என்றும் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.


Advertisement

மேலும் கோடநாடு கொலை தொடர்பாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும் கோடநாடு எஸ்டேட் சசிகலா குடும்பத்தினரிடம்தான் இருந்தது எனவும் தெரிவித்தார். 

கோடநாட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்த நிலையில் அவற்றை எடுக்க யார் ஆட்களை அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பழி சுமத்தப்படுவதாகவும் பழி சுமத்தும் நபர்கள் அனைவரும் பல குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார். 


Advertisement

பணத்திற்காக எதையும் செய்யும் கூட்டம்தான் இவர்களை வைத்து அவதூறு பரப்ப முயற்சிப்பதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement