விஜய் ஹசாரே போட்டியில் ரோகித் சர்மா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விளையாடுகிறார்.


Advertisement

விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான லீக் போட்டிகள் இப்போது நடக்கிறது. இந்தப் போட்டியில் சர்வதேச போட்டிகளில் ஆடும் பல முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் தற்காலிக கேப்டனுமான ரோகித் சர்மா மும்பை அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் ஆடுகிறார். 


Advertisement

இதுபற்றி மும்பை அணியின் தலைமை தேர்வாளர் அஜீத் அகர்கர் கூறும்போது, ’நாக் அவுட் போட்டியில் பங்கேற்கும் அவர் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடுவார். அதற்கான அணி நாளை தேர்வு செய்யப் படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார்’ என்றார்.

ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா, இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அதனால் அவர் விஜய் ஹசாரே போட்டியில் விளையாட இருக்கி றார். இந்த போட்டி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டித் தொடருக்கான பயிற்சியாக அவருக்கு அமையும். 

loading...

Advertisement

Advertisement

Advertisement