2024ஆம் ஆண்டில் இந்தியா இந்துக்கள் ராஜ்ஜியமாக மாறும் என்ற பாஜக எம்எல்ஏவின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பைரியா தொகுதி எம்எல்ஏ சுரேந்திர சிங், நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசும் போது, “இந்தியா இந்துக்களின் ராஜ்ஜியம் ஆகும். இந்துக் கலாச்சாரத்தை ஏற்கும் இஸ்லாமியர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியும். நாட்டில் ஒரு சில இஸ்லாமியர்களே தேசப்பற்றுடன் இருக்கின்றனர். எனவே இந்தியா இந்து ராஜ்ஜியமாக ஆனவுடன், இந்து முறையை ஏற்பவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படும்.
வரும் 2025ஆம் ஆண்டுடன் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே 2024ஆம் ஆண்டிலேயே இந்தியா இந்துக்கள் ராஜ்ஜியமாக மாறும். பிரதமர் நரேந்திர மோடி, அவதார புருஷன். கடவுளின் அருளாலும், மோடியின் தலைமையினாலும் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தாலும் உலகில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. ராகுல் காந்திக்கு இந்தியன், இத்தாலியன் என்ற இரண்டு மதிப்புகள் உண்டு. ஆனால் அவர் ஒருபோதும் இந்திய வழிமுறையை நினைத்ததில்லை. அவர் காந்தியின் வாரிசு என்ற மந்திரத்தின் மூலம் பிரதமராக நினைக்கிறார். ஆனால் இந்தியாவின் மதிப்பையும், வலிமையையும் முன்னேற்றும் தகுதி அவருக்கு இல்லை. அவர் இந்தியன் மற்றும் இத்தாலியன் கலவையாக உள்ளார்" என்று கூறியுள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்