எக்ஸ்-மேன் டைரக்டர் மீது பாலியல் புகார்!

-X-Men--film-director-Bryan-Singer-sued-for-alleged-sexual-assault-Bryan-Singer

ஹாலிவுட் பட இயக்குனர் பிரையன் சிங்கர் மீது பாலியல் வன்முறை புகாரை சிறுவன் ஒருவன் கொடுத்துள்ளார்.


Advertisement

எக்ஸ்-மேன், சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் உட்பட சில ஹாலிவுட் படங்களை இயக்கியவர் பிரையன் சிங்கர். இவர் மீது சீசர் சான்செஷ் என்ற 17 வயது சிறுவன், பாலியல் வன்முறை தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளான். அதில், சியாட்டில் நகரில் நடந்த ஒரு பார்ட்டிக்கு சிறப்பு விருந்தினராக சிங்கர் வந்திருந்தார். பார்ட்டி கப்பல் ஒன்றில் நடந்த போது மது விருந்து பரிமாறப்பட்டது. அப்போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை சிங்கர் மறுத்துள்ளார். 
இவர் மீது இப்படி பாலியல் புகார் கூறுவது முதன்முறையல்ல. ஏற்கனவே 2014-ல் ஒரு புகாரும் அதற்கு முன்பும் கூறப்பட்டிருந்தது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement