உலக அளவில் அஸ்வின்தான் சிறந்த ஸ்பின்னர்: முத்தையா முரளிதரன்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின்தான், இன்றைய நிலையில் உலக அளவில் சிறந்த சுழல்பந்துவீச்சாளராக இருக்கிறார் என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.


Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 போட்டிகளில் விளையாடி, 300 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்களைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இந்நிலையில் 800 விக்கெட்டுகளை பெற்றுள்ள இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், அஸ்வினை பாராட்டியுள்ளார்.

அவர் கூறும்போது, ‘ 300 விக்கெட் என்பது சாதாரண விஷயமல்ல. இது பெரிய சாதனைதான். இன்றைய நிலையில் அவர்தான் உலக அளவில் சிறந்த ஸ்பின்னராக இருக்கிறார். அவர், ஒரு நாள் அணியில் சேர்க்கப்படவில்லை. அங்கும் திரும்பி பல அதிசயங்களை படைப்பார் என்று நம்புகிறேன்’ என்றார். 
’இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையே தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடப்பது போரடிக்காதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த முத்தையா முரளிதரன், ‘அப்படி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் விராத் கோலியே வெற்றி பெறுவது சலிப்பாக மாறலாம்’ என்று ஜாலியாகச் சொன்னார். 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement