தீபிகா படுகோனேவுக்கு ஷாருக்கான், அமீர்கான் ஆதரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தீபிகா படுகோனேவுக்கு பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Advertisement

ராஜபுத்திர ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. இதில் பத்மாவதி வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி அப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ராஜபுத்திர இனத்தவர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக ஊடக பிரிவு தலைவர் சூரஜ் பால், அமு பத்மாவதியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் அந்த படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்த அறிவிப்புக்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு பாலிவுட் பெரும் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் அமீர்கான் வெளிப்படையாக தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளார்கள். மேலும் தீபிகா படுகோனே நேரில் அழைத்து அமீர்கான் சந்தித்ததாக செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. அப்போது அமீர்கான் அதிக கவலைப்பட்டதாக தெரிகிறது. மேலும் இந்த சூழ்நிலை குறித்தும் இருவரும் நீண்ட நேரம் பேசிதாக தெரிகிறது. இந்த சர்ச்சைக்கு நடுவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தீபிகா  வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement