ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அஜித் வரலாறு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தின் 11 வது ஆண்டு விழா கொண்டாட்டம் அஜித் ரசிகர்களிடையே ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Advertisement

சமூகவலைதளம் முழுக்கவே கடந்த சில வாரங்களாக மெர்சல் பற்றிய சர்ச்சைகள்தான் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றன. விஜய் ரசிகர்கள் அந்தப் படம் பற்றிய
செய்திகளை வேகமாக பரவ செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அஜித் ரசிகர்கள் களத்தில் குதித்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்து
2006ம் ஆண்டு வெளியான வரலாறு படத்தின் 11 ஆண்டு விழாவை சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள். ஆகவே இன்று ட்விட்டர் பக்கத்தில்
காலை முதல் வரலாறு ட்ரெண்ட்டில் இருந்து வருகிறது. இந்தப் படத்திற்கு முதலில் காட்ஃபாதர் என தலைப்பிட்டு பிறகு வரலாறு என மாற்றம் செய்தனர். இதில்
அஜித் லேசான பெண் பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியான வில்லன் வசூலை தாண்டி மாபெரும் சாதனை படைத்தது.
அன்றைய கணக்கில் 32 கோடிக்குமேல் ஈட்டித்தந்ததாக தகவல்கள் வெளி வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement