இன்று கடைசி டி20: ஐதராபாத்திலும் விரட்டுது மழை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 


Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்த ஆஸ்திரேலியா, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றபெற்றன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் இன்றிரவு நடக்கிறது. கோப்பையை வசப்படுத்த இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும். இந்திய மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது லோகேஷ் ராகுல் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement