அனிதாவின் முகமூடி அணிந்து காந்திக்கு மரியாதை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனிதாவின் முகம் அச்சடிக்கப்பட்ட முகமூடியை அணிந்துகொண்டு காந்திக்கு மரியாதை செலுத்தினர். 


Advertisement

திருச்சியில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனிதாவின் முகம் அச்சடிக்கப்பட்ட முகமூடியை அணிந்துகொண்டு தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும்  "அனிதாவிற்கு அனிதாவாய் அணி திரள்வோம்" எனும் வாசகத்தை கையில் வைத்திருந்தனர். பின்பு அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் அந்த  மாணவர் அமைப்பினரை காவல் துறையினர் தடுத்ததால் அமைதியாக சென்று மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement