தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வருகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துள்ளதாக ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்வதாக சபாநாயகர் நேற்று அறிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு அவர்களது 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இதனால், 18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து ஆளுநர் வித்யாசார் ராவ் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் வித்தியாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வருகிறார். தற்போதைய அரசியல் சூழலில் ஆளுநரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்று மதியம் ஆளுநர் சென்னை வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிமன்றத்தில் உத்தரவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவாரா அல்லது என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு