[X] Close

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் - பிசிசிஐ இன்று ஆலோசனை

Subscribe
The-BCCI-is-consulting-today-on-when-to-host-the-remaining-IPL-matches-suspended-by-Corona

கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்துகிறது.


Advertisement

பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது. 4 அணி வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 4 முதல் நிறுத்தப்பட்டது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் எஞ்சிய 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

துபாய், சார்ஜா, அபுதாபியில் வைத்து செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10-ம் தேதிக்குள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் புறக்கணித்த நிலையில் வெளிநாட்டு வீரர்களை எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க வைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close