[X] Close

ஈரான்: 47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத மகனை கொலை செய்த பெற்றோர்!

Subscribe
A-47-year-old-Filmmaker-Murdered-by-his-parents-for-being-Unmarried

ஈரான் நாட்டை சேர்ந்த 47 வயதான சினிமா இயக்குனர் பாபக் கோரம்டினை அவரது பெற்றோரே கொலை செய்துள்ளனர். அவரது திருமணம் குறித்து பேசிய போது பேச்சு வார்த்தை முற்றியதால் ஆத்திரத்தில் மகன் பாபக் கோரம்டினை பெற்றோர் ஆணவக் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது உடல் மேற்கு தெஹ்ரானில் உள்ள எக்படன் என்ற நகரத்தில் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸில் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

இயக்குனர் பாபக் கோரம்டினின் தந்தை அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததை போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. கொலைக்கு பிறகு மகனின் உடலை மறைக்க அவர்கள் முயற்சி செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர். 

எண்ணற்ற குறும்படங்களை கொலையான பாபக் கோரம்டின் உருவாக்கி உள்ளார். லண்டனில் படிப்புக்காக தனது குடும்பத்தை பிரிந்து இருந்த அனுபவத்தை கூட அவர் குறும்படமாக இயக்கி உள்ளார். 


Advertisement

image

“எங்கள் மகன் எங்களை தினந்தோறும் இம்சித்து வந்தான். அவனுக்கு தகுந்த நேரத்தில் திருமணம் ஆகாதது இதற்கு காரணம் என தெரிந்து கொண்டோம். அதனால் இந்த முடிவை எடுத்தோம்” என அவரது பெற்றவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். இருவரும் தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளனர். 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close