கொலை உள்ளிட்ட தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதால்தான் நிதிஷ் ராஜினாமா செய்துவிட்டதாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த லாலு, “நிதிஷ் குமார் பாஜகவின் கைகளுக்குள் நின்று விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் மோடியுடன் கூட்டு வைத்துள்ளது எல்லோருக்கும் தெரியும். நிதிஷ் ராஜினாமா செய்த சில மணித்துளிகளில் மோடி வாழ்த்து தெரிவிக்கிறார். இப்போது நிதிஷும், தேஜஸ்வியும் ஒதுங்கி நிற்கட்டும். மீதம் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புதிய அரசை அமைக்கட்டும்” என்றார்.
மேலும், “நிதிஷ் குமார் தேஜஸ்வியை ராஜினாமா செய்யச் சொன்னார். தேஜஸ்வி தவறு செய்யாதபோது, எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விளக்கத்தை நிதிஷ் குமாருக்கு அளித்திருக்கிறோம். நிதிஷ் குமார் கொலை மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார். கொலை என்பது ஊழலைவிட மோசமான செயல். இந்தக் குற்றச்சாட்டுகளை தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த கிரிமினல் குற்றச்சாட்டிலிருந்து விடுபட முடியாது என்பது ராஜினாமாவுக்கு முக்கியக் காரணம். எல்லாவற்றுக்கும் மேல் நிதிஷ் ஆர்.எஸ்.எஸ். உடன் கூட்டு சேர்ந்துவிட்டார்” என்று லாலு கூறியுள்ளார்.
Loading More post
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!