ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நாட்டில் ஊழல் மற்றும் வறுமை ஒழிக்கப்பட வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 330 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பாக்தாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது.
மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் முயன்ற போது அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் மோதல் ஏற்பட்டது.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்