[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

srilanka-president-election-polling-concludes

இலங்கையில் நடைபெற்று வந்த 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தம்பி கோத்தபய ராஜபக்ச பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கோத்தபயாவை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாச மகன் சஜித் போட்டியிடுகிறார். மேலும் 33 பேர் களத்தில் உள்ளனர். பதவியில் உள்ள பிரதமர், அதிபர், எதிர்க்கட்சி தலைவர் போட்டியிடாதது 1982க்கு பிறகு இதுவே முதல்முறை. அதிபர் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 75 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளது. அதிபர் தேர்தலின் முடிவுகள் நள்ளிரவிற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close