[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமனம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான பரப்புரையை நாளை திருவாரூரில் தொடங்கும் நிலையில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களவை தேர்தலில் 1 தொகுதி, இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டி - சே.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)

“போர் வந்துவிட்டால் எனது, மோடி கட்டுப்பாட்டில் நிலைமை இருக்காது” - இம்ரான்கான்

imran-khan-offers-talks-again-with-india-says-better-sense-should-prevail

பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும், போரால் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பேசிய இம்ரான்கான், “முதல் உலகப் போர், 2ஆம் உலகப் போர் என போர்களை உலகம் சந்தித்துள்ளது, அதனால் இழப்புகள் ஏராளம். உலகில் நடைபெற்ற அனைத்து போர்களும் தவறான புரிதலால் நடந்து வருகின்றன. போரினை தொடங்குபவர்களுக்கு, அது எங்கு முடியும் என்பது தெரியாது. இருநாடுகளிடமும் ஆயுதங்கள் உள்ளது. நாம் தவறான மதிப்பீடு செய்யலாம். இருநாடுகளிடையேயான உறவை மேம்பட செய்ய வேண்டும். போர் தொடங்கிவிட்டால், நிலைமை என்னுடைய அல்லது நரேந்திர மோடியில் கட்டுப்பாட்டில் அது இருக்காது.

    

புல்வாமா தாக்குதல் பற்றி இந்தியா விசாரித்தால் ஒத்துழைப்பு தர தயார்.  இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தான் விரும்பவில்லை. அதேபோல், பயங்கரவாதிகளின் மண்ணாக இருக்கவும் பாகிஸ்தான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். 

     

இந்தப் பேட்டியின் இந்திய விமானி பிடிபட்டது தொடர்பாக இம்ரான்கான் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாக ரவீஷ் குமார், இந்திய விமானி பிடிபட்டது தொடர்பாக பாகிஸ்தான் எவ்வித தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றார். ஒருவேளை விமானி பாகிஸ்தான் வசமிருப்பது உறுதி செய்யப்பட்டால் தூதரகரீதியாக அல்லது ஐ.நா. மூலம் அவரை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close