[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
உலகம் 04 Oct, 2017 07:54 PM

தனிநாடு கோரி ஸ்பெயினில் முழு அடைப்பு

spain-catalonia-protest

தனிநாடு கேட்டலோனியாவுக்கு ஆதரவு கோரி ஸ்பெயினில் முழு‌ அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

2010 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் அரசியல் சாசன நீதிமன்றம் கேட்டலோனியாவின் தன்னாட்சி தொடர்பான சில சட்டப் பிரிவுகளை நீக்கியதால், மீண்டும் விடுதலைப் போராட்டங்கள் தொடங்கின. கேட்டலோனியாவின் வரலாற்றையும், தனித்தன்மையையும் போற்றும் வகையில் அதைத் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதையடுத்து நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, விடுதலை தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. தனி மொழி, பண்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கேட்டலோனியா, ஸ்பெயினின் மொத்தப் பொருளாதார வளத்தில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டிருப்பதால், தனி நாடாக இயங்குவதில் பெருந்தடை ஏதுமிருக்காது என்ற நம்பிக்கையைப் பிரிவினை கோருவோர் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் தனிநாடு கோரி தலைநகர் பார்சிலோனா உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால் ம‌க்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுவாக்கெடுப்பின்போது வாக்காளர்கள் மீது அராஜகத்தை ஏவி விட்ட காவல்துறையினரை கண்டித்து பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழக சதுக்கத்தில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானார் பங்கேற்று கேட்டலோனியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மிக நீளமான தே‌சிய கொடியை சுமந்து சென்றனர். மேலும் சாலைகளில் டிராக்டர் ஓட்டி வந்தும் பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இ‌தனா‌ல் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close