[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
உலகம் 04 Aug, 2017 05:06 PM

இங்கிலாந்தில் வாழும் இந்திய மருத்துவர் மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள்

118-sexual-assaults-on-indian-physician-in-england

இங்கிலாந்தில் வாழும் இந்திய மருத்துவர் மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் லண்டன் ரோம்போர்டு பகுதியில் புருனல் குளோஸ் என்ற இடத்தில் வசித்து வருபவர் டாக்டர் மணிஷ் ஷா. 47 வயதான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் மீது 118 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். அவற்றில், 13 வயதுக்குட்பட்ட குழந்தையிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. டாக்டர் மணிஷ் ஷா, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் வரும் 31-ம் தேதி அங்கு பார்க்கிங்சைடு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சம்பவங்கள் 2004-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும், 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் இடையே நடந்துள்ளதாகவும், இவரால் 54 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் லண்டன் மாநகர போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

2013-ம் ஆண்டு முதன்முதலாக கைது செய்யப்பட்ட டாக்டர் மணிஷ் ஷா, பல முறை ஜாமீன் பெற்றுள்ளதும், நீண்டதொரு விசாரணைக்கு பின்னர்தான் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close