[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: ராஜினாமா முடிவை நோக்கி நவாஸ் ஷெரீஃப்?

panama-papers-leaks-nawaz-sharif-is-fast-running-out-of-options

பனாமா ரகசிய ஆவணங்கள் வெளியான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்திருக்கிறது. 

எதிர்கட்சிகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டும் என்பது மக்களின் கருத்தாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நவாஸ் ஷெரீஃபின் குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளதாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கூட்டு விசாரணைக் குழு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனால், நவாஸ் ஷெரீஃபை உச்சநீதிமன்றமே தகுதிநீக்கம் செய்யும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நவாஸ் ஷெரீஃப், கடைசி மூச்சு இருக்கும்வரை இந்த விவகாரத்தை எதிர்த்துப் போராடுவேன் என்று அமைச்சரவை சகாக்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவாஸ் ஷெரீஃபின் ராஜினாமா குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக்  கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் எதிர்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close