[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

கொலம்பியாவில் சோகம்: நிலச்சரிவில் 254 பேர் பலி

colombia-landslides-have-killed-at-least-206-ppl-injured-hundreds

கொலம்பியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 254 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தென்மேற்கு கொலம்பியாவில் உள்ளது புடுமாயோ மாகாணம். இங்குள்ள மொகாவா பகுதியில் கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்தது. இதில் அங்குள்ள அனைத்து ஆறு மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தன. மழை மேலும் தொடர்ந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரைகள் உடைந்து, மலைப்பகுதிகளில் இருந்து சனிக்கிழமை நள்ளிரவில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் அந்தப் பகுதியில் வசித்து வந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். நிலச்சரிவும் ஏற்பட்டதால் அதில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, ஈக்வடார் மற்றும் பெரு நாடுகளின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

பாலங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியை சேர்ந்த பலரை காணவில்லை எனவும் பலியானோர்கள் எணிணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close