[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரிட்டனில் மீண்டும் போரிஸ் ஜான்சன் ஆட்சியமைக்க வாய்ப்பு
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

உண்மைக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் பழனிசாமி

cm-palanisamy-speaks-about-election-result

இரு தொகுதி இடைத்தேர்தலின் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்களிடையே பேசிய முதலமைச்சர் இரு தொகுதி இடைத்தேர்தலின் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இரு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. பொய்யை நம்பியதால் திமுக-காங் கூட்டணி இரு தொகுதிகளையும் இழந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலிலும் உண்மைச் சொன்னோம். ஆனால் மக்கள் நம்பவில்லை; தற்போது நம்பியுள்ளனர்’’ என்று தெரிவித்தார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : CmCm palanisamyபழனிசாமி
Advertisement:
Advertisement:
[X] Close