[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

அபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போவச் செய்வதா..? உயர்நீதிமன்றம்

hc-irked-by-move-to-reduce-fines

புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளதா அல்லது அதற்கான அபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் வகையில் செயல்படுத்த உள்ளதாக என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காகவும், வாகன விபத்துகளை குறைப்பதற்காகவும் அதிக அபராதத்தை விதித்து புதிய வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி விதிக்கப்படும் அபராதத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அபராதத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குள் திருத்திக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதையடுத்து பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அபராதத் தொகை பாதியாக குறைக்கப்பட்டது. இதேபோன்று உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களும் அபராதத் தொகையை குறைத்து உத்தரவிட்டன. தமிழ்நாட்டில் இதற்கான அபராதம் குறைக்கப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில் பைக் டாக்ஸியை தமிழகத்தில் அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளதா அல்லது அதற்கான அபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் வகையில் செயல்படுத்த உள்ளதாக என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த அபராதத் தொகையை முதல்முறையாக குறைத்த குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் மீதும் சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை பதிவு செய்தது. நீதிமன்றங்கள் பல காலமாக அறிவுறுத்தியன் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

“ இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கமோ வாகன வாகன குற்றங்களை குறைப்பது ஆகும். ஆனால் மாநில அரசங்கம் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போவத் செய்தவன் மூலம் அதன் நோக்கம் சிதைந்துவிடும். எனவே மாநில அரசாங்கம் அதனை செய்யக் கூடாது. மத்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இருக்க வேண்டும். சட்டத்திருத்தை நீர்த்துப் போகச் செய்யாதவாறு எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். மற்ற காரணங்களை விட சாலை விபத்துகளில்தான் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்” எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close