[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

கோயிலுக்கு பக்தர் போல் வந்த திருடன் - சிசிடிவியில் சிக்கிய காட்சி 

cellphone-theft-in-temple

சென்னை அருகே திருநீர்மலையில் கோயிலில் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்ட நபர் ஆலய நிர்வாகியின் செல்போனை திருடிச் செல்வது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது.

திருநீர்மலையில் உள்ள ஸ்ரீ லட்சுமி விநாயகர் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் வந்தார். கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்த அந்த நபர் கோவிலுக்குள் சென்று அனைத்து சன்னதிகளில் உள்ள தெய்வங்களையும் வழிபட்டார். சுமார் ஒரு மணி நேரம் அவர் மனமுருக வழிபட்டதைக் கண்டவர்கள் அந்த நபர் பக்திமான் என எண்ணியிருப்பர். 

 

ஆனால் அவர் பக்கா திருடன் என்பது பின்னர்தான் தெரியவந்தது. சாமி கும்பிட்ட கையோடு குடுகுடுவென படியேறி மேல்தளத்துக்குச் செல்லும் அந்த நபர், அலுவலக அறையில் இருந்த ஆலய நிர்வாகியின் செல்போனை திருடிக்கொண்டு தப்பிவிட்டார். மேசையில் இருந்த செல்போன் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பக்தர் போல் வந்தவர் பண்ணிய வேலை எனத் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் செல்போன் திருடனை தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close