[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

மாசடைந்த ஆறுகள் பட்டியல் - தமிழகத்தின் வசிஷ்ட நதிக்கு முதலிடம்

tamilnadu-vasishta-river-dirtiest-finds-study

மிக மோசமாக மாசடைந்த ஆறுகள் மற்றும் நதிகளின் பட்டியலில் தமிழகத்தின் வசிஷ்ட நதி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் உள்ள தகவலின்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய ஆய்வில் 351 மாசடைந்த நதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களில் வசிஷ்ட நதி (தமிழ்நாடு), கக்கார் (ஹரியானா), பாதர் (குஜராத்), மிதி (மகாராஷ்டிரா), சபர்மதி(குஜராத்), ஹிண்டன்(உத்தரப்பிரதேசம்), சட்லஜ் (பஞ்சாப்) உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

                     

2525 நீளமுடைய கங்கை நதி எதிர்பார்த்ததை விட அதிக அளவில் தூய்மையாக இல்லையென்றாலும், அசுத்தமான நதிகளின் பட்டியலில் முதல் 25 இடங்களில் இடம்பெறவில்லை. தண்ணீரில் இருக்கும் பயோ கெமிக்கல் ஆக்ஸிஜன் அளவை பொறுத்தே அசுத்தம் கணக்கிடப்படுகிறது. ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்பட்சத்தில் அந்த நதி பயன்பாடு அற்றதாக போகிறது. 

2009 ஆம் ஆண்டு 121 மட்டுமே மாசுபாடுள்ள நதிகளாக கணக்கிடப்பட்டது. பின்னர், 2015 ஆம் ஆண்டில் 302 ஆகவும், 2018 இல் 351 ஆகவும் அதிகரித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close