[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

தமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

rain-in-all-over-tamilnadu

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கமலாபுரம், கொரடாச்சேரி, பூந்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் நேரடி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, அன்னவாசல், ஆலங்குடி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காந்திநகர், காரியாபட்டி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

சென்னையில் பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தூரம் மழை பெய்தது. இதேபோல் நாகப்பட் டினம், கடலூர், அருப்புக்கோட்டை, சேலம், திண்டிவனம் பகுதிகளிலும் கனமழை வெளுத்துவாங்கியது. 

இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close