[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மரங்களில் விளம்பரத் தட்டிகள் வைத்தால் அபராதம் -சென்னை மாநகராட்சி

chennai-corporation-imposes-fine-on-placing-banners-and-other-things-in-trees

மரங்களில் விளம்பரத் தட்டிகள், கம்பிகள் போன்ற தேவையற்றப் பொருட்களை வைத்தால் 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

விளம்பர பதாகைகள் மற்றும் தட்டிகளை வைக்க பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தளர்த்தியது. சென்னை மாநகரில் விளம்பர பதாகைகளை வைக்க சில கட்டுபாடுகள் விதித்தது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சில விதிகளை அறிவித்தது. அதன்படி விளம்பர பதாகைகள், தட்டிகளை அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் மரங்களில் விளம்பரத் தட்டிகள், கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் ரூ.25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள் ளார்.  மேலும் மரங்களை எவ்வித சேதாரமுமின்றி பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.  ஏற்கெனவே மரங்களில் வைக்கப்பட்டிருக்கிற விளம்பரத் தட்டிகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close