[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

தண்ணீர் லாரி மோதி எல்.கே.ஜி. குழந்தை உயிரிழப்பு - தாய் கண் முன் சோகம்

lkg-boy-die-for-water-lorry-accident-in-chennai

சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் எல்.கே.ஜி. குழந்தை நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் சுல்தானா. இவர் எல்.கே.ஜி. பயிலும் தனது மகன் முகமதுவை பள்ளியில் இருந்து வீட்டு அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட அதிலிருந்த குழந்தை முகமது லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டான். 

லாரி சக்கரம் தலையில் ஏறியதால் நிகழ்விடத்திலேயே குழந்தை முகமது உயிரிழந்தான். இதைக்கண்ட சுல்தானா கதறி துடித்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். அவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்தனர். மேலும் ஆத்திரத்தில் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close