[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் 6 பேர் திடீர் தகுதி நீக்கம்

upsc-civil-exam-disqualification-6-tamil-student

அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் 6 பேர் திடீர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் வருமானத்தை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதர வகுப்பு பிரிவைச் சேர்ந்த தமிழக மாணவர்கள் 6 பேரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் திடீரென தகுதி நீக்கம் செய்துள்ளது. மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் 6 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் ஓபிசி நான் கிரிமீ லேயர் வரம்புக்குள் வரவில்லை எனவும் காரணம் கூறி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தகுதி நீக்கத்தை அறிவித்துள்ளது.

அகில இந்திய அளவில் குறிப்பிடத்தக்க ரேங்க் எடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிக்கு தயாராகிய மாணவர்கள் தீடீர் தகுதி நீக்கத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close