[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

காவல் நிலையத்திற்கு உள்ளேயே ‘டிக்டாக்’ எடுத்த மூவர் கைது

3-arrested-for-taking-tik-tok-in-police-station

பிணையில் இருந்த மூவர், கையெழுத்து போட காவல் நிலையம் வந்தபோது ‘டிக்டாக்’ செய்து நடித்ததால் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் நல்ல பள்ளியைச் சேர்ந்தவர்கள் மதன்குமார் (வயது 18), வினோ என்கிற ரித்திக் ரோஷன் (வயது 20), ஆதிசேஷன் (வயது 20). இவர்கள் மூன்று பேரையும் ஏற்கெனவே ஒரு வழக்கில் அதியமான் கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மூவருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், மூன்று பேரையும் தினந்தோறும் அதியமான் கோட்டை காவல்நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மூவரும் காவல்நிலையம் வந்து கையெழுத்து போட்டுவிட்டு, காவல் நிலையத்தில் இருந்து வெளியே வருகிற மாதிரி ‘டிக்டாக்’ எடுத்து அதனை வாட்ஸ்அப்பில் பரப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து நேற்று போலீசார் மூவரையும் அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போலீசாரை தகாத வார்த்தைகளால் மூவரும் திட்டி உள்ளனர். இதனையடுத்து அந்த ‘டிக்டாக்’ வீடியோவை கைப்பற்றிய போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close