[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி 

the-sivaganga-collector-s-office-with-the-man-tried-to-fire-due-to-agent-problem

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குமரேசன் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அடுத்த பிரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் முகவர் தொழிற் செய்து வருகிறார். இந்நிலையில் குமரேசன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். அருகில் இருந்த காவலர்கள் அதனைத் தடுத்து, குமரேசனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குமரேசன் அதே பகுதியில், கீழப்பூங்குடியை சேர்ந்தவர்களிடம் ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை. இதனால் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அவரது பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், குமரேசன் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் குமரேசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை பகுதியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பல மோசடி கும்பல் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close