[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-23062019

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால், நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுபோன்று நடந்திருக்கக் கூடாது எனவும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவதை எதிர்க்கவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்றும் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்

மத்திய அரசின் ஊழியர்களுக்கான ஜூன் மாத ஊதியம் தாமதமாக வழங்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சமூகவலைத்தலங்களில் வெளியான தகவல் தவறு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close